புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்துவைப்பு..!

ஐக்கிய புங்குடுதீவு சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் நிதியுதவியுடன் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் 10 கணினிகள் மற்றும் 65 அங்குல தொடுதிரை ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் ஆங்கில விருத்தி அலகு என்பன நேற்றையதினம்(25) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் கமலவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விருந்தினர்களாக, வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் நிறஞ்சன், வலய கல்வி பணிப்பாளர் ஞானசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அதேவேளை, ஐயாத்துரை சிவசாமி மாஸ்டர் மற்றும் திருமதி பத்மலோசனி சிவசாமி ஆகியோரின் நினைவாக சிவசாமி பிரேமானந்தன்(இங்கிலாந்து) தம்பதியினரால் எமது ‘பல்கலைக்கழகத்தை நோக்கி’ கல்வித்திட்டத்தின் கீழ் 30 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *