
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து விருந்தகங்கள், விருந்தினர் இல்லங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் மென்மையான மதுபானங்கள் – பியர் மற்றும் வைய்ன் விற்பனைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளது.
இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகள் மற்றும் பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் மது அருந்துவதையும் சட்டவிரோத மதுபானம் வழங்குவதையும் இது தடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.