
வடமாகாணத்திலுள்ள தொழில் வெற்றிடங்களை வெளிமாவட்டத்தினரை கொண்டு பூரணப்படுத்தாமல், வடக்கிலுள்ள பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவேண்டுமென லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும அவர் தெரிவிக்கையில்,
புதிய யாப்பு திருத்தத்தில் 13ம் தரம் உள்ளடக்கப்படவில்லை என்ற சந்தேகம் காணப்படுகிறது. அது தொடர்பில் மக்களிடையே பிரச்சனைகளும் எழாமலில்லை.
கடந்த அரசாங்கம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதியை ஒத்துக்கிருந்தது. அதற்காக காணிகளும் வழங்கப்பட்டன.
ஆனால் குறித்த காணியின் பெறுமதி ஐந்து லட்சம் எனின் அதில் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்குமாகாணத்தில் காணப்படுகின்ற ஆறுக்கு மேற்பட்ட குளங்களை அரசாங்கம் புனரமைத்துக் கொடுத்துள்ளது.
எனினும், அங்கு காணப்படுகிற குளங்களின் நீர் வடபகுதி மக்களுக்கு அல்லாமல் வெளிமாவட்டத்தினருக்கு பயன்படுத்தப்படுவதாக நான் கேள்வி பட்டிருக்கின்றேன்.
ஆனால் அது தவறான விடயம். குறித்த குளங்களை அப்பகுதி மக்களுக்கே முக்கியமாக புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற தொழில் வாய்ப்புகளை இங்குள்ள உள்ள பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வழங்க வேண்டும்.
வடக்கில் வெளி மாவட்டங்களில் இருப்போரே அதிகமாக தொழிவாய்ப்பை பெற்று வேலை செய்கின்றனர். அங்குள்ள பட்டதாரிகளுக்கு வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை.
எனவே, வடக்கில் காணப்படுகின்ற பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் தகுதிக்கு ஏற்ப தொழில்களை வழங்குங்கள்.
அதேவேளை, பொலிஸ் மற்றும் அரச தரப்பினர், தமிழ் மக்களை புறக்கணிப்பதாகவும், சில மொழி தொடர்பில் பிரச்சனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அறியக்கிடைத்து.
நாட்டிலே ஒரே சட்டம் என்றால், அனைவருக்கும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் கவலையளிக்கிறது.
அபிவிருத்தி தொடர்பில் நோக்கினால், இங்குள்ள மூலப்பொருட்களை முக்கியம் கொடுத்து சிறந்த முறையில் தரப்படுத்தி பயனாளர்களுக்கும் , நிறுவனகளுக்கும் விற்பனைக்கு வழங்கலாம்.
இந்த செயற்பாடு நடைமுறைக்கு வந்தால் மக்களின் பொருளாதார பிரச்சனைக்கு சிறிதேனும் தீர்வு காணலாம் என்றார்.