
அனுபமற்ற, வாய் பேச்சு மட்டுமே உள்ள உதய கம்மன்பில போன்ற நபர்களிடம் நாட்டின் மிக முக்கியமான அமைச்சு பதவியை வழங்கியது அரசாங்கம் செய்த மிகப் பெரிய தவறு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த பத்திரன, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிக நெருக்கமான நபர்களில் ஒருவர் என்பதுடன் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பாக அவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தின் ஊடாக எதிர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக கடந்த காலங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.