
களுத்துறை வடக்கு பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து காலி நோக்கி பயணித்த இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
28 வயதான ராஜேந்திரம் சனாதனன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இதேவேளை, களுத்துறை கல்லூரிக்கு முன்பாக சடலமொன்று கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம்; இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.