யாழில் சாதனைகளை நிகழ்த்திய வடக்கு மாகாண வீரர்கள்

ஊடாக சிவலீமன் சிலம்ப கழகத்தால், சிலம்பத்தில் உலக சாதனை முயற்சியொன்று இன்றைய தினம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

யா/உரும்ப்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் , யாழ் , முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பை சேர்ந்த 14 சிலம்ப மாணவர்களினால் குழுச் சாதனை முயற்சியொன்றும், 10 வயது மற்றும் 8 வயதை சேர்ந்த 2 தனி மாணவர்களினால் push up இல் சாதனை முயற்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சாதனை முயற்சியானது Goshin Isshinryu Karate Association Sri Lanka வின் தலைவரும் இலங்கை சிலம்ப சம்மேளனத்தின் வடமாகாணத்தின் தலைவருமான பாபு சென்சாயின் தலைமையின் கீழ் Global World Record இன் அங்கீகரிக்கப்புடன் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *