
கொழும்பு, பெப்.27
எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளார்.
டீசல் இல்லாவிட்டால், பெரும்பாலும் திங்கட்கிழமை முதல் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும். எனினும், பேருந்து பயணங்களை 50 சதவீதமாகக் குறைத்து சேவை முன்னெடுக்கப்படும்.
இந்த நிலையில், சலுகைகளை வழங்க வேண்டும் எனவும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.