
நுவரெலியா, பெப்.27
நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த தம்பதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விடுதி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக மீட்கப்பட்டுள்ளனர்.
குருநாகல், கொகரெல்ல பிரதேசத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்த தம்பதியினர் நேற்று (26) நள்ளிரவு வரை பார்பிக்யூ பார்ட்டியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் கடும் குளிர் நிலவியதால், தம்பதியினர் தங்களுடைய அறைக்குள் “பார்பிக்யூ” அடுப்பை எடுத்துச் சென்றது பின்னர் தெரியவந்தது. 58 மற்றும் 59 வயதுடைய ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை அவர்கள் எழுந்திருக்காத காரணத்தினால் குடும்பத்தினர் அறையைத் திறந்து பார்த்தபோது இருவரும் படுக்கையில் சடலமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் எடுத்துச் செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்