சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்ப்பட்ட இளவாலை பெரிய விளான் சிகரம் அமையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா பெரியவிளான் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இன்று பிற்பகல் 3.00மணியளவில் இடம்பெற்றது.
குறிப்பாக கல்வி,விளையாட்டு,சுகாதாரம்,
சமூகசேவைகள் என பல தொண்டுகளை சிகரம் அமையம் கடந்த ஒரு வருடமாக ஆற்றி வந்த நிலையில் இன்றைய தினம் ஓராண்டு நிறைவு விழா இடம்பெற்றது.
இதன் போது சிகரம் அமையத்தின் கடந்தகால செயற்பாடுகள் காணொளி மூலம் காண்பிக்கப்பட்டதோடு புலமைப்பரிசில்,கல்விப்பொதுதராதர சாதாரண தர சித்தி,உயர்தர சித்தி மற்றும் பெரிய விமானச் பகுதியில் இருந்து முதன் முதலாக உதவி விரிவுரையாளராக தெரிவு செய்யப்பட்ட ந.லக்சனா உட்பட விளையாட்டு போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கும் பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.மேலும் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் இளவாலை பொலிஸ் நிலைய உதவிப்பொறுப்பதிகாரி தோரதெனிய ,சிகரம் அமையத்தின் ஆலோசகரும் சமாதான நீதவானுமான செ.பீற்றர் பியன் வெனு ,நாராந்தனை பங்கு தந்தை அஜந்தன்,சிகரம் அமைய உறுப்பினர்கள் ,மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பிரதேச மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
