
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நிலவும் முரண்பாட்டினால் சொந்த நாட்டுக்கு செல்ல முடியாத உக்ரைன் சுற்றுலா பயணிகளின் விசாவை நீடிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் வெளிவிவகார அமைச்சு ஏற்கெனவே கலந்துரையாடி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.