ஒத்துழைப்பு தராவிட்டால் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்- ரஷியா மிரட்டல்

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா மிரட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷியாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில், தனக்கு எதிராக செயல்படும் நாடுகளை ரஷியா மறைமுகமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயல்பாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும் என்றும் உலக நாடுகளை ரஷியா மிரட்டியுள்ளது

இதுகுறித்து, ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் ஜெனரல் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 4 அமெரிக்கர்கள், 2 ரஷியர்கள், ஒரு ஜெர்மனியர் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் சில நாடுகளின் கூட்டு முயற்சியில் விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. மேலும், ரஷிய எஞ்சின்கள் மூலமாக விண்வெளி நிலையம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அதனால் தனக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் விண்வெளி நிலை செயல்பாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும். இதனை பாதுகாக்கப்படவில்லை என்றால் 500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷியா மிரட்டியுள்ளது.

மாலை மலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *