இலங்கைக்கான ஈரான் தூதுவருக்கும் பாதுகாப்பு செயலாளர் எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மற்றும் ஈரானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.