
கொழும்பு, பெப்.27
அரச நிறுவனங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மேலதிகமாக சுமார் 8 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் கடந்த அரசின் ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் என்று நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவர்களில் பெரும்பாலானோர் அந்தந்த நிறுவனங்களில் குறிப்பிட்ட பணி வழங்கப்படவில்லை.
இந்நிலைமையால் நாட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.