
கொழும்பு, பெப்.27
அரசாங்கத்தில் இருந்து தேவையான நேரம் வரும் போது கட்சி மத்திய குழுவின் அனுமதியுடன் வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரி சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.