முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களிற்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதார ஊக்குவிப்பு உதவிகள், நமது ஈழநாட்டின் வாழ்வாதார உதவித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவில் வசிக்கும் மாவீரர் குடும்பங்கள் மற்றும் போரில் அங்கவீனமுற்ற முன்னாள் போராளிகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குடும்பங்களிற்கு வாழ்வாதாரத்தை விரிவுபடுத்துவதற்காக தலா 20 ஊர்க்கோழிகள் வழங்கப்பட்டதுடன், மிகவும் வறுமை நிலையிலுள்ள முன்னாள் போராளி ஒருவருக்கும் மாவீர் குடும்பம் ஒன்றுக்கும் அவர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.
மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரத்தின் குடும்பத்தினரால் மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் மற்றும் சிறப்பு பள்ளி ஆகியவற்றில் வசிக்கும் 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது



