
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் தற்போது நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வந்து நாடு திரும்ப முடியாமல் உள்ள உக்ரேனியர்களின் நலம் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி உதயங்க வீரதுங்க அளுத்கமவில் உள்ள கிளப் பெந்தோட்ட ஹோட்டலுக்குச் சென்று, தற்போது சொந்த நாட்டிற்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் உக்ரைனியர்களின் நலம் குறித்து விசாரித்தார்.
சுற்றுலா வந்த 4,000 உக்ரைனியர்கள் இலங்கையில் தற்போது தங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.