
சென்னை, பெப்.28
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தில் தோல்விக்கு பிறகு, பெரம்பலூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் 9 பேர், இனி அரசியல் வேண்டாம் நற்பணி மட்டும் போதும் என்று முடிவெடுத்து கட்சியை விட்டு விலகுவதாக கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சியாக செயல்படாமல், நற்பணி மன்றமாகவே செயல்படுகிறது. கட்சியிலும் எந்த வளர்ச்சியும் இல்லை. கட்சியின் உறுப்பினர்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றனர். கட்சி நம்பிக்கை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.
கட்சித் தலைவர் சென்னையில் மட்டும் பிரச்சாரம் செய்தார். அங்கேயாவது கட்சி வெற்றி பெற்றிருந்தால் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும். தலைவர் மீது எங்களுக்கு வெறுப்பு இல்லை, கட்சியை விட்டு வெளியேறுகிறோம். ஆனால், வழக்கம் போல் நற்பணி மன்றத்தை தொடர்வோம்.