முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை பத்து மணிவரை 23.23% வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலமைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும் உதவி தெரிவித்தாட்சி அலுவலருமான அ. உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
காலை 7:00 மணிக்கு ஆரம்பமாகிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது
முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 889 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். அதில் 3,947 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள்
காலை 10 மணி வரை 19, 271 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 23.23% வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் ஓரளவு ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் தேர்தல் சுவரொட்டிகள் நீக்கப்படாமை தொடர்பில் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவற்றை உடனுக்குடன் முறைப்பாடு பிரிவு ஊடாக பொலிசாரின் உதவியுடன் அவற்றை நீக்குவதாகவும் தெரிவித்தார்.