பசறை 13 ஆம் கட்டைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்து 5ஆவது நாளாக இன்றும் பதுளை – செங்கலடி பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பதுளை – செங்கலடி பிரதான வீதியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் பிரபாத் அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த வீதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டாலும் சில தினங்களுக்குத் தொடர்ந்தும் மாலை 6 மணிக்கு மூட நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்