ஜி.சீ.ஈ. உயதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருக்கின்றன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ள பரீட்சைக்காக 6 நாட்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் இன்று பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.