சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான 03 கட்ட மீளாய்வில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவமும் அதன் நிறைவேற்று சபையும் இதனை அங்கீகரித்ததன் பின்னர் இலங்கைக்கு சுமார் 333 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என ஐ.எம்.எஃப் இன்று (23) அறிவித்துள்ளது.
ஐ.எம்.எஃபின் வேலைத்திடங்களை தொடர புதிய அரசாங்கம் காட்டும் முனைப்பும் முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.