ரணில் அரசின் மேலும் நான்கு முன்னாள் அமைச்சர்களுக்கு சிஐடி அழைப்பு!

  

இலங்கைக்குள் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக மேலும் 04 முன்னாள் அமைச்சர்கள் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, முன்னாள் அமைச்சர்களான நளின் பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, நசீர் அஹமட் மற்றும் விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கினர்.

தரமற்ற மருந்துகளை இலங்கைக்கு கொண்டு வந்து அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 18 பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்ய மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம அனுமதியளித்திருந்த நிலையில் குறித்த நால்வரும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்ததன் பின்னரே குறித்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *