கிண்ணியா கடற்கரைப் பூங்காவை அள்ளிச் சென்ற கடலலை..!

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கடற்கரைப் பூங்கா கடலலையினால் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

மிகுதியாக உள்ள பகுதியை, பாதுகாக்க வேண்டும் என்றால் கடல் அரிப்பை கட்டுப்படுத்த வேண்டும். தவறினால் இன்னும் சில மாதங்களில் முழுமையாக கடல் அலைக்கு பூங்கா இரையாகி விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கு நாளாந்தம் செல்லும்  போக்குவரத்து பயணிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இந்தப் பூங்கா ஓய்வளித்து, மகிழ்வூட்டுகின்ற ஒரு முக்கியமான இடமாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக, ஏற்பட்ட கன மழையும், கடல் அலையின் சீற்றமும் இந்தப் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. 

இந் நிலையில், வெளிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்ன சேகர கடலரிப்பால் பாதிக்கப்பட்ட இந்தப் பூங்காவை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதன்போது, நகர சபை செயலாளர் எம்.கே.அனீஸ் இந்தப் பூங்காவின் அவசியம் குறித்து, முழுமையாக இவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

நிதிப் பற்றாக்குறையின் நிமிர்த்தம், உடனடியாக இதனை புனரமைக்க முடியாவிட்டாலும், அடுத்த கட்டத்தில் இந்தப் பூங்காவை கடலரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  இதன்போது ஆளுநர் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *