வெள்ள அழிவுக்கு மத்தியில் காட்டு யானைகளின் அட்டகாசமும் தீவிரம்..!

முல்லைத்தீவில் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் மூன்று காட்டு யானைகள் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நெத்தலியாறு பகுதிகளில் தினமும் இரவு வேலைகளில் காட்டு வந்து நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்களை மேய்ந்து வருகிறது.

தற்பொழுது, வெள்ளம் மெல்ல மெல்ல வடிந்து வரும் நிலையில், யானைகள் தொடர்ச்சியாக நெற்பயிர்களை மேய்ந்து வருவதன் காரணமாக இரவு வேலைகளில் அப்பகுதிக்கு வெள்ளம் காரணமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு 40 நாட்கள் கடந்த நிலையில் உள்ள வயல்களிலே யானைகள் மிதித்து துவசம் செய்து வருவதுடன் அப்பயிர்களை மேய்ந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலை ஒவ்வொரு வருடமும் தமக்கு ஏதோ ஒரு வகையில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் பொழுது அழிவுகளே அதிகமாக ஏற்பட்ட வருவதாகவும் இதற்கான நஷ்ட ஈடு எமக்கு எவராலும் வழங்கப்படுவதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *