முழுமையான பலனைத் தராத கொவிட் தடுப்பூசிகள்: மூன்றாவது டோஸ் செலுத்த ஹங்கேரி முடிவு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் முழுமையான பலனைத் தராத நிலையில், மூன்றாவது டோஸ் செலுத்த ஹங்கேரி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஆர்பன் தனது மக்களுக்கு வானொலி மூலம் தெரியப்படுத்தியதாவது,

‘தனது மக்களுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் மூன்றாவது தவணை தவணை தடுப்பூசி கிடைக்கும். இந்த மூன்றாவது தவணை தடுப்பூசியானது வயது, உடல் நிலை ஆகியவற்றைப் பொறுத்து அளிக்கப்படும்.

இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகே, மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது தவணையாக என்ன தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களோ, அதற்கு மாற்றாக வேறு தடுப்பூசி செலுத்திகொள்வது குறித்து மருத்துவர்கள் முடிவெடுப்பார்கள்.

மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயப்பட தேவையில்லை. மக்கள் பயப்படவில்லை என்றால், மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது எனக் கருதினால், அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் என்ன தவறு?’ என கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் போன்ற நாடுகள் தங்கள் மக்களுக்கு வழங்கிய சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி போதிய பலனை அளிக்காததன் காரணமாக தம் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *