பிள்ளையானின் கடந்த கால ஊழல்கள் தொடர்பில் விசாரணை அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் இராணுவ முகாம் மற்றும் வீதித் தடைகள் அகற்றப்பட்டமையை வரவேற்கின்றோம்.
அதிகார பகிர்வு அமுல்படுத்தப்படவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை விரைவாக இடம்பெற வேண்டும்.
ஊழழை நிறுத்தும் செயற்பாடு விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
பிள்ளையானின் கடந்த கால ஊழல் தொடர்பில் விசாரணை தேவை.
பார் பொமிட் பட்டியலை விரைவாக வெளியிடுங்கள்.
பார் பொமிட் யார் பெற்றது என்பதை அறிய மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றார்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த ஹர்சன நாணயகார,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பார் பெர்மிட் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்ற அறிவிப்பு இன்று (04) வெளியாகவுள்ளது என குறிப்பிட்டார்.