விளைநிலங்களுக்கு வரும் விலங்குகளை கொல்லலாமா? அமைச்சரின் தவறான கருத்து – எழுந்த சர்ச்சை

 

விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என விவசாயம், கால்நடை வளர்ப்பு அமைச்சர் லால் காந்த குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானது என வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் நயனக ரன்வல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பான அமைச்சரின் தவறான கருத்தை அரசாங்கம் மீளப் பெற வேண்டும் என நயனக ரன்வல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் காரியாலயத்தில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 

விவசாய நிலங்களுக்கு வரும் வன விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம். 

அதனால் எவ்வித சட்ட சிக்கலும் வராது என அமைச்சர் லால் காந்த அண்மையில் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளமை பாரதூரமானதொரு கருத்தாகும்.

விலங்குகளை கட்டுப்படுத்த விவசாயிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கலாம் என்றால் விளைநிலங்களுக்கு வருகைத் தரும் விலங்குகளை கொல்லலாமா? என்ற கேள்வி எழும்.

காட்டு விலங்குகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வெறுப்புக்குள்ளாகியுள்ளர்.

இவ்வாறான பின்னணியில்  அமைச்சரின் கருத்து விவசாயிகளுக்கு உத்தேவகமளிக்கும் வகையில் உள்ளது.

அமைச்சரின் இந்த பாரதூரமான கருத்து தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதனையும் குறிப்பிட முடியாது. 

அமைச்சரின் கருத்துக்கு அமைய செயற்பட்டு, நெருக்கடிக்குள்ளாக வேண்டாம் என விவசாயிகளிடம் கேட்டுக் கொள்கிறோம்.- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *