2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் குட்டித் தேர்தல்?

2025 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனு கோரப்படவுள்ள நிலையில், அதற்கான சட்டம் அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ளது. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் புதிதாக வேட்புமனு கோரப்படுவதால் குட்டி தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே செலவளிக்கப்பட்ட சுமார் 72 கோடி ரூபா வீண் செலவு எனச்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

341 உள்ளூராட்சி சபைகளுக்கு 8 ஆயிரத்து 711 உறுப்பினர்களைத்  தெரிவு செய்வதற்காக ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களின் சார்பில் 80 ஆயிரத்து 672 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்பிட்டிய பிரதேச சபை தவிர ஏனைய 341 சபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *