இன்று(09) முதல் தினமும் இரண்டு இலட்சம் தேங்காய்கள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் என வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், சதொச விற்பனை நிலையங்களில் தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள சதொச கிளைகளில் தேங்காய்களை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் நுகர்வோருக்கு வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களுக்கு சொந்தமான தேங்காய்கள் சதொச ஊடாக நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சதொச ஊடாக நாளாந்தம் 100,000 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.