சபாநாயகரின் டாக்டர் பட்டம் போலியானது என ஜப்பான் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும் எனவும் பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வந்தவர்களால் இன்று பாராளுமன்றத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தியின் பேச்சாளர் குறித்த தகவல் பொய்யானது என்றும், கலாநிதி அசோக ரன்வல கலாநிதி இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பான உண்மையை அடுத்த வாரம் கூறுவேன் என அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆகவே, நாம் இது தொடர்பில் மிகுந்த அவதானமாக இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.