ஹக்கீம் தேசியப் பட்டியலை எளிதாக்கினார் – ரஞ்சித் மத்தும்பண்டார!

தேசியப் பட்டியல் தொடர்பான கட்சிக் கூட்டத்தை முடித்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார மேற்குறிப்பிட்ட கருத்தினை ஊடகங்களுக்கு தெரிவித்தார்…

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்… 

முஸ்லிம் காங்கிரஸினால் இன்று கிடைக்கப்பெற்ற தணிக்கையின் காரணமாக தமக்கான தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு நீதிமன்றில் கோரியது. 

இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

 இக் கூட்டத்திற்கு சட்டத்தரணிகள், கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இங்கு பிரசன்னமாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தேசியப் பட்டியல் சம்பந்தமான விவாதத்தின் பின்னர் நான்கு பேரை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவித்தனர்.

இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சுஜீவ சேனசிங்க ஆகியோருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிஷாம் காரியப்பர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொஹமட் ஸ்மைல் முத்து மொஹமட் ஆகியோரே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளனர். என கட்சியின் செயலாளர் நாயகம்ரஞ்சித் மத்தும பண்டார ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *