முக்கியஸ்தர்கள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விடயத்தில் விரைவில் மறுஆய்வு செய்யப்பட உள்ளது.
அச்சுறுத்தல் மதிப்பீட்டைத் தொடர்ந்து, வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பின் வலிமை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சில முக்கியஸ்தர்களுக்கு தற்போது 100க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், சில முக்கியஸ்தர்கள், வேறு இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருந்தால், அந்தந்த பொலிஸ் நிலையங்களிலிருந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் இந்த ஆய்வு திட்டத்தின் கீழ் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.