வடமாகாண சுற்றுலா பணியகம் மற்றும் வடமாகாண அமைச்சின் எற்பாட்டில், “சுற்றுலாவினை மேம்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தினை உருவாக்குவோம்” என்னும் கருப்பொருளில்.
உலக சுற்றுலா தின கலை கலாசார வாகன ஊர்தி நடை பயண நிகழ்வு நேற்று (15) மாலை யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இவ் வாகன ஊர்தி நடை பயணம் யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் ஆரம்பமாகி அங்கியிருந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.எஸ் வீதி ஊடாக சென்று யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் இனிதே நிறைவடைந்தது.
கலாசார நிகழ்வுகளான மேளதாள, நாஸ்வர இசைகள், சிறுவர் நடனங்கள், கோலாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டநிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் வாகன பவனியில் 1968 தொடக்கம் 2001ஆம் ஆண்டு காலப்பகுதி வரையான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மாதிரி புகையிரத வண்டி என்பன ஈடுபட்டன.
இதில் முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், வடமாகாண சுற்றுலா பணியகம், வடமாகாண அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.