அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கினிகத்தேன நகரில் அருசி பதுக்கி வைத்து இருந்த வர்த்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்
கைது செய்யப்பட்ட வர்த்தகர் இடம் பதுக்கி வைத்து இருந்த 10 கிலோகிராம் எடையுள்ள 10 உறைகளில் பொதி செய்ய பட்ட 100 கிலோ அரிசியும் 5 கிலோ எடை கொண்ட அரிசி பொதி 30 ம் மீட்டு உள்ளதாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யுடன் பொலிசார் மற்றும் நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்து வருவதாகவும் பாரிய அளவில் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து இந்த சுற்றி வளைப்பு இடம் பெற்றது.
இது போன்ற சுற்றி வளைப்பு சாமி மலை மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் பொகவந்தலாவ டிக்கோயா புளியாவத்தை ஹட்டன் கொட்டகலை பத்தனை தலவாக்கலை மற்றும் ஏனைய நகங்களில் மேற் கொள்ள இருப்பதாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.