பால்நிலை சமத்துவம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டம் நேற்று (21) யாழ்ப்பாணம் கொக்குவிலில் முன்னெடுக்கப்பட்டது.
பால்நிலை சமத்துவம் தொடர்பாக மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இதுவரை இல்லை என்பதை கருத்தில்கொண்டு, யாழ்.பிராந்திய மனித உரிமை பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் குறித்த விழிப்புணர்வு கருத்த்திட்டம் நேற்று (21) நடாத்தப்பட்டது.
இதன்போது பெண்கள், ஆண்கள் வயோதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரையும் உள்வாங்கி இலங்கையிலே குறிப்பாக வடமாகாணத்திலே பாலியல் சமத்துவம் எவ்வாறு பேணப்படுகிறது அதற்கான முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ். பிராந்திய மனித உரிமைகள் பணிப்பாளர் த.கனகராஜ், தற்போது குறிப்பாக வட பகுதியில் மக்கள் மத்தியில் பால் நிலை சமத்துவம் தொடர்பாக சரியான விழிப்புணர்வு காணப்படவில்லை.
இதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தல் சிறந்த உதாரணம் என்று சுட்டிக்காட்டிய பணிப்பாளர், பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பிரதிநிதிகள் யாரும் இல்லை, அவற்றை தெரிவு செய்வது பால் நிலை சமத்துவத்தை பேணுவதிலும் மக்கள் சரியான அக்கறை கொள்வதில்லை என்றார்.
எனவே பாராளுமன்ற தேர்தல் இதற்கொரு சரியான உதாரணம் என்றும் ஊடகங்களுக்கு தனது கருத்தினை தெரிவித்தார்.
பால்நிலை சமத்துவ தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வேலைத் திட்டம் இன்று யாழ். கொக்குவிலில் முன்னெடுக்கப்பட்டது.
பால்நிலை சமத்துவம் தொடர்பாக மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு இதுவரை இல்லை என்பதை கருத்தில் கொண்டு யாழ்.பிராந்திய மனித உரிமை பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் குறித்த விழிப்புணர்வு கருத்த்திட்டம் இன்று நடாத்தப்பட்டது.
இதன் போதுபெண்கள், ஆண்கள் வயோதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரையும் உள்வாங்கி இலங்கையிலே குறிப்பாக வடமாகாணத்திலே பாலியல் சமத்துவம் எவ்வாறு பேணப்படுகிறது அதற்கான முக்கியத்துவம் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ். பிராந்திய மனித உரிமைகள் பணிப்பாளர் த.கனகராஜ், தற்போது குறிப்பாக வட பகுதியில் மக்கள் மத்தியில் பால்நிலை சமத்துவம் தொடர்பாக சரியான விழிப்புணர்வு காணப்படவில்லை.
இதற்கு கடந்த பாராளுமன்ற தேர்தல் சிறந்த உதாரணம் என்று சுட்டிக்காட்டிய பணிப்பாளர், பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் பிரதிநிதிகள் யாரும் இல்லை அவற்றை தெரிவு செய்வது பால் நிலை சமத்துவத்தை பேணுவதிலும் மக்கள் சரியான அக்கறை கொள்வதில்லை என்றார்.
எனவே பாராளுமன்ற தேர்தல் இதற்கொரு சரியான உதாரணம் என்றும் ஊடகங்களுக்கு தனது கருத்தினை தெரிவித்தார்.