டென்னிஸ் ஜோடியான அலெக்ஸ் டி மினார் மற்றும் கேட்டி போல்டர் இந்த வாரம் 2025 பருவம் தொடங்குவதற்கு முன்னதாக தங்களின் நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலக டென்னிஸ் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய வீரர், பிரித்தானியாவின் முன்னணி பெண் வீராங்கனையுடன் பல ஆண்டுகளாக உறவில் உள்ளார்.
இந்த நிலையில் நிச்சயதார்த்தம் தொடர்பான அவர்களின் அறிவிப்பு டென்னிஸ் சமூகத்தின் வாழ்த்துக்களை பெற்றுள்ளது.
25 வயதான டி மினார் மற்றும் 28 வயதான போல்டரும் 2024 இல் குறிப்பிடத்தக்க டென்னிஸ் பருவங்களைக் கொண்டிருந்தனர்.
இதில், அவுஸ்திரேலிய வீரர் முதல் 10 இடங்களுக்குள் முதல்முறையாக அறிமுகமானார்.
அதே நேரத்தில் போல்டர் தனிப்பட்ட சிறந்த தரவரிசையில் 23 ஆவது இடத்தை அடைந்தார்.
இந்த வாரம், சிட்னியில் நடக்கும் கலப்பு அணிகள் யுனைடெட் கிண்ணத்துடன் அவர்கள் 2025 பருவத்துக்கான போட்டிகளைத் தொடங்குவார்கள்.