யானைகளை பார்வையிட ஆன்லைன் டிக்கெட் – இன்று முதல் நடைமுறை

 

பின்னவல யானைகள் சரணாலயத்தை பார்வையிட விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்க முடியும் என மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று (26) முதல் இது அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் பொதுக் கண்காட்சிக்காக கொண்டுவரப்பட்ட இரண்டு வங்காளப் புலிகளை அவதானிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட போதே பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

மேலும், QR குறியீட்டைப் பயன்படுத்துதல் மற்றும் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு ஏற்ப, ஆன்லைன் முறை மூலம் டிக்கெட்டுகளை வழங்க நாங்கள் பணியாற்றியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *