கொழும்பின் பல பகுதிகளில் முச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதுவை, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஒருகொடவத்தை ஆகிய காவல்துறை நிலைய உத்தியோகத்தர்களால் குறித்த ஐவரும் கைதாகினர்.
கைதானவர்கள் கொழும்பு – கோட்டை காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டிகள் கொழும்பு – கோட்டை, கிரிபத்கொடை, வத்தளை, பொரளை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குப்பட்ட பகுதிகளில் வைத்துத் திருடப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.