மீனவர் பிரச்சினை – ஜனாதிபதியுடன் பேச கடற்றொழில் அமைப்புகள் திட்டம்

 

வட பகுதி மீனவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனவரி மாத இறுதியில் சந்தித்துப் பேசுவதற்கு கடற்றொழிலாளர் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. 

அதேவேளையில் எதிர்வரும்  4ஆம் திகதி சனிக்கிழமை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரையும் இவ்வமைப்புகள் சந்தித்துப் பேசவுள்ளன. 

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும், வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. 

இந்தச் சந்திப்பிலேயே இது தொடா்பான தீமானம் எடுக்கப்பட்டது. 

இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சால் முன்மொழியப்படவுள்ள புதிய சட்டமூலத்தை இடைநிறுத்தல், தமிழக அரசியல் தலைமைகளுடன் வடக்கு கிழக்கு தமிழ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதை வலியுறுத்தல், 

தேசிய மக்கள் சக்தியால் மீனவர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைதல், 2025 ஆண்டில் வடமாகாண மீனவர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை சந்திப்பதற்கான தீர்மானம் போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *