
இணையப்பாவனைக்கு அடிமையாதல் முழு உலகையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது வயது வித்தியாசமின்றி சிறுவர்களையும் முதியவர்களையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கின்றது. ஆண்களும் பெண்களும் ஏனைய பால்நிலையைச் சார்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய நிலையில், இணையப் பாவனைக்கு அடிமைப்படுதல் என்பது குடும்பங்கள்தோறும் அனுபவிக்கின்ற ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல குடும்பங்களின் அமைதியை பாதிக்கின்ற விடயமாகவும் மாறியுள்ளது.