சுலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 தொண்ணூறு இலட்சம் ரூபா  இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுலோச்சன கமகே உட்பட இரு சந்தேகநபர்களையும் தொடர்ந்து 17 ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையால் கொழும்பு டொரிங்டன் அவனியுவில் அமைந்துள்ள காணியொன்றை சுவீகரித்தமைக்காக உடனடியாக செலுத்தப்பட வேண்டிய நட்டஈட்டில் ஒரு பகுதியை வழங்குவதற்காக தொண்ணூறு இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போதே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *