வவுனியா பல்கலையின் தேவைப்பாடுகள் தொடர்பில் சத்தியலிங்கம் எம்.பி பிரதமரிடம் கோரிக்கை..!

வவுனியா பல்கலைக்கழகத்தின் தேவைகள் மற்றும் உயர்தர உயிரியல் பாட வினாத்தாள் காணப்படும் பிழைகள் தொடர்பிலும் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவிடம் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் விரைவில் தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம்(10) பிரதமருடன் இடம்பெற்ற தனிப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா பல்கலைக்கழகத்தின் வசதியீனங்கள், பணியாளர்கள் எதிர்நோக்கும் விடயங்கள், பல்கலைக்கழகத்திற்கு தேவையான கட்டுமான தேவைகள் மற்றும் மாணவர்களின் நோக்கும் விடுதியின்மை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது கல்வி அமைச்சர் என்ற முறையில் எடுத்துக்கூறியிருந்தேன்.

மாணவர்களின் விடுதிப்பிரச்சனைக்கை உடனடி தீர்வாக பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறி இருப்பதன் காரணமாக அங்கு காணப்படும் பாரிய கட்டடங்களில் மாணவர் விடுதியை தற்காலிகமாக இயக்குவதற்கான இயலுமைகள் தொடர்பிலும் குறித்த இடத்தை வனவள திணைக்களத்தில் இருந்து விடுவிப்பது தொடர்பிலும் பிரதமரோடு இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை  உயர்தர பரீட்சையில் உயிரியல் பாட வினாத்தாளில் தொடர்ந்தும் அதிகமான பிழைகள் காணப்படுகின்றமை தொடர்பிலும் கல்வி அமைச்சர் என்ற முறையில் சுட்டிக்காட்டியதோடு இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *