இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்!

சுற்றுச்சூழலில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்களுடன் இலங்கை சுற்றுச்சூழல் நடவடிக்கை வலையமைப்பு ( Sri Lanka Environmental Action Network:  SLEAN)  கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது.

குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் (11) நேற்று இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுச்சூழல் சவால்களை இனங்கண்டு, தீர்வுகளை உருவாக்கும் நோக்கில் Save a Life இன் முன்முயற்சியாக செயல்படும் ‘SLEAN’ இன் முயற்சியை மேலும் வலுப்படுத்தி அவர்களது செயற்பாடுகளையும் அதனூடான விழிப்புணர்வுகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான முயச்சியாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது வட மாகாணத்தில் சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தலாக உள்ள பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதுடன் அவ்வாறான பாதிப்புகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு, அவ்வாறு மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் பிரச்சினைகள் உருவாகவதை தவிர்த்துக்கொள்ளவது மற்றும் அவற்றை இல்லாதொழிக்க முன்னெடுக்கும் பொறிமுறைகள் தொடர்பில்  மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக கொண்டுசென்று விழுப்புணர்வை ஏற்படுத்தவது தொடர்பில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *