ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பட்டிப்பொங்கல் விழா..!

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான பட்டிப்பொங்கல் தினத்தினை உலகெங்கும் உள்ள இந்துக்கள் இன்றையதினம்(15) கொண்டாடி வருகின்றனர் .

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உழவர்களின் இல்லங்களிலும் ஆலயங்களிலும் விசேட விதமாக பசுக்கள் பட்டு வஸ்த்திரங்கள் , பூமாலைகளினால் அலங்கரிக்கப்பட்டு மாட்டு பட்டிகளிலும் இல்லங்களிலும் பட்டிப்பொங்கல் பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும். மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இன்று காலை பட்டிப்பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றது.

மக்களின் வாழ்வில் ஒன்றாக கலந்த பசுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக இது கருதப்படுகிறது.

இவ்வாலயத்தில் பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு பசுக்களுக்கு பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ கு.சிற்சபேசன் தலைமையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.

‘குலம் காக்கும் பசுவை காப்போம் எனும் தொனிப்பொருளில் பட்டிப்பொங்கல் விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *