
இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகளின் பிரசன்னம் அதிகரித்திருப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு தேசிய ஷூரா சபை கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக் காலமாக நாட்டிற்குள் வரும் இஸ்ரேலிய பிரஜைகள் குறித்தும் சமூக நல்லிணக்கம், தேசிய நலன் மற்றும் தேசிய பாதுகாப்பில் அந்த விவகாரம் ஏற்படுத்த முடியுமான தாக்கங்கள் குறித்தும் எமது கவலைகளை தெரிவிக்க விரும்புகிறோம்.