மட்டக்களப்பு கடலில் கரையொதுங்கியுள்ள மர்மப் பொருள்

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைக் கடற்கரையில் இன்று அதிகாலை மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 

இன்று அதிகாலை வேளையில் கடற்கரைக்குச் சென்ற மீனர்கள் தாம் இதுவரையில் அறிந்திராத மர்மப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்ததாகவும், பின்னர் அதனைக் கரைசேர்த்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு, இளம் நீலக் கலரில் கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக இப்பொருள் பெரிய அளவில் காணப்படுகின்றது.  

இப்பொருளின் மேற்பகுதியில் சிறியளவு வலைமுடிச்சு, டயர்களும் காணப்படுகின்றன. 

இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிப்பதோடு,

இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *