முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி காலமானார்

இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி ஆஸ்திரேலியா – சிட்னியில் இன்று காலமானார்.

சிவகுமாரன் பசுபதி என்ற இயற்பெயர் கொண்ட சிவா பசுபதி  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

இலங்கைத் தமிழ் முன்னணி சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சிவா பசுபதி அரச வழக்குரைஞர்களின் இயக்குநராகப் பணியாற்றினார்.

1974 முதல் 1975 வரை அரசுத் தலைமை வழக்குரைஞராகவும், பின்னர் அவர் 1975 முதல் 1988 வரை சட்டமா அதிபராகவும் பணியாற்றினார்.

சிவா பசுபதிக்கு 1989 ஆம் ஆண்டு இலங்கையின் இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான தேசமான்ய பட்டம் வழங்கப்பட்டது.

முன்னாள் இலங்கை அரச தலைமை வழக்குரைஞரும், இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபருமான சிவா பசுபதி ஓய்வுபெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்து சிட்னியில் வாழ்ந்து வந்தார்.

2002 – 2006 காலப் பகுதியில் நோர்வே தலைமையிலான அமைதிப் பேச்சுகளில் அவர் பங்கேற்றார்.

மேலும் ஆத்திரேலிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவராகவும்,  நியூ சவுத் வேல்சு மாநிலத் தமிழ் மூத்தோர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *