தேங்காய் பறிக்கத் தென்னை மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம், சூரியவெவை பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலும் தெரியவருகையில் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் உயிழிந்த நபர் தேங்காய் வியாபாரி என்று தெரியவந்துள்ளது.