இலங்கையின் 77 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வவுனியா மாவட்ட சாரணர்கள் க்ளீன் சிறிலங்கா என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர்.
வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் இருந்து வவுனியா புதிய பேருந்து நிலையம் வரை இவ் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.
வவுனியா மாவட்ட சாரண ஆணையாளர் யோ.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் சமுதாய பொலிஸ் பொறுப்பதிகாரி, உதவி மாவட்ட ஆணையாளர்கள், பாடசாலை சாரணர் தலைவர்கள், பொறுப்பாசிரியர்கள், திரி சாரணர்கள், சாரணர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர்.