அமெரிக்க முத்தமிழ் பல்கலைக்கழகம் குளோபல் ஆர்ட்ஸ் அகடமியின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மிஷன் மண்டபத்தில் குளோபல் நடன திருவிழா நடைபெறவுள்ளதாக அகடமியின் ஸ்தாபகர் செல்லத்துரை பிரதீஸ்குமார் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வெள்ளவத்தை தனியார் விடுதியில் நடைபெற்றது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த நடன ஆசிரியர்களும் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
உலகம் முழுவதிலும் குளோபல் நடன திருவிழாவானது நடைபெற்றுவந்த நிலையில் இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ளதாகவும் நடன திருவிழாவில் 200 இற்கும் மேற்பட்ட இந்திய நடன கலைஞர்களும் 20 நடன ஆசிரியர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக செல்லத்துரை பிரதீஸ்குமார் மேலும் தெரிவித்தார்..